ADDED : மார் 10, 2025 12:39 AM

திருப்பூர்; மகளிர் தினத்தை முன்னிட்டு, இந்திய மருத்துவ சங்கம் மகளிர் அணி, 'டியோக்ஸ்' ஓஜி சொசைட்டி மற்றும் சிக்கண்ணா கல்லுாரி என்.எஸ்.எஸ்., ஆகியன இணைந்து மகளிர் தினம் கொண்டாடின.இதன் ஒரு பகுதியாக சிக்கண்ணா கல்லுாரி முதல் காலேஜ் ரோடு சவுடாம்பிகா திருமண மண்டபம் வரை 'வாக்கத்தான்' நடந்தது.
'பெண்களின் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்' என்ற தலைப்பில் நடந்த வாக்கத்தானை சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் மீரா கொடியசைத்து துவக்கி வைத்தார். ஸ்ரீசரண் மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள், செவிலியர்கள், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பெண்களின் சிறப்புகளை வெளிப்படுத்தும் விதமான கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிகழ்ச்சியில் வாக்கிங், யோகா, தியானம், சரி விகித உணவு ஆகியவை மூலம் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.