/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகளிர் திட்ட வணிக வளாக கடைகள் புதுப்பிப்பு; மாவட்ட நிர்வாகத்திற்கு கருத்துரு
/
மகளிர் திட்ட வணிக வளாக கடைகள் புதுப்பிப்பு; மாவட்ட நிர்வாகத்திற்கு கருத்துரு
மகளிர் திட்ட வணிக வளாக கடைகள் புதுப்பிப்பு; மாவட்ட நிர்வாகத்திற்கு கருத்துரு
மகளிர் திட்ட வணிக வளாக கடைகள் புதுப்பிப்பு; மாவட்ட நிர்வாகத்திற்கு கருத்துரு
ADDED : மார் 06, 2025 09:53 PM

உடுமலை; உடுமலையில், மகளிர் குழுக்களுக்கான வணிக வளாகங்களை புதுப்பிக்க, மாவட்ட நிர்வாகத்துக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மகளிர் திட்டம் செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பெண்கள் குழுக்களாக பிரிந்து, சுயதொழில் செய்வது, கைவினைப்பொருட்கள் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகின்றனர்.
இவர்களுக்கான வங்கி கடனுதவி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி, தொழில் முனைவோருக்கான ஆலோசனைகளை, மகளிர் திட்ட வழிநடத்துநர்கள் ஏற்பாடு செய்கின்றனர்.
பயிற்சிகள், சுயதொழில் வாயிலாக, இவர்கள் தயாரிக்கும் கைவினைப்பொருட்களிலிருந்து வருவாய் பெறுவதற்கும், பொருட்களை சந்தைபடுத்தவும், வணிக வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உடுமலை உழவர் சந்தை அருகே, மகளிர் திட்டத்துக்கான வணிக வளாகம் உள்ளது. கீழ் தளத்தில் ஐந்து மற்றும் மேல் தளத்தில் ஐந்து கடைகள் உள்ளன. பூலாங்கிணற்றில், நான்கு பெரிய வாளவாடியில், நான்கு கடைகளும் மகளிர் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
கீழ் தள கடைகளுக்கு இரண்டாயிரம் ரூபாய், மேல் தள கடைகளுக்கு, 1,500 ரூபாயும் வாடகை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
பூலாங்கிணர் பகுதியில் மட்டுமே, நான்கு கடைகளும் இடையூறு இல்லாமல் செயல்படுகிறது. உடுமலையில், நான்கு கடைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. வாளவாடியில் வணிக வளாகம் சிதிலமடைந்துள்ளதால், முழுமையாகவே செயல்பாடில்லாமல் உள்ளது.
இதனால் வணிக வளாகங்களை புதுப்பித்து, காலியாக இருக்கும் கடைகளை வாடகைக்கு விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மகளிர் திட்ட அலுவலர்கள் கூறுகையில், 'உடுமலையில் உள்ள அனைத்து கடைகளும் புதுப்பிக்கவும், வாளவாடியில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கும், மாவட்ட நிர்வாகத்துக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது காலியாக உள்ள கடைகளை, வாடகைக்கு விடுவதற்கும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது' என்றனர்.