/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்லால் தாக்கப்பட்டதொழிலாளி பலி
/
கல்லால் தாக்கப்பட்டதொழிலாளி பலி
ADDED : மே 21, 2024 12:23 AM
திருப்பூர்;திருப்பூர் வெங்கமேட்டை சேர்ந்தவர் பாண்டி, 45. இவர் ரயில்வே கூட்செட்டில் மேலாளராக உள்ளார். இவரது உறவினருக்கு சொந்தமான எடை நிலையம் திருப்பூர் வளம் பாலம் ரோட்டில் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக எடை நிலையம் செயல்படவில்லை. அங்கிருந்த இரும்பு பொருட்கள் திருடு போய் வந்தது.
கடந்த, 16ம் தேதி இரவு எடை நிலையத்தில் மூன்று பேர் இரும்பு திருடுவதாக கிடைத்த தகவலின் பேரில், பாண்டி அங்கு சென்றார். அதில், ஒருவர் தப்பி சென்றார்.
சதீஷ் மற்றும் ஏழுமலை என்ற இருவரிடமும், பாண்டி விசாரித்து கொண்டிருந்தார்.
அப்போது, தான் சிக்கி கொண்டதற்கு சதீஷ் தான் காரணம் என, ஆவேசப்பட்ட ஏழுமலை, கல்லால் தாக்கினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த சதீஷ், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து வடக்கு போலீசார் ஏழுமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த சதீஷ் இறந்தார். இதனால், கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

