/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜெயந்தி மெட்ரிக் பள்ளியில் உலக சிலம்ப சாதனை நிகழ்ச்சி
/
ஜெயந்தி மெட்ரிக் பள்ளியில் உலக சிலம்ப சாதனை நிகழ்ச்சி
ஜெயந்தி மெட்ரிக் பள்ளியில் உலக சிலம்ப சாதனை நிகழ்ச்சி
ஜெயந்தி மெட்ரிக் பள்ளியில் உலக சிலம்ப சாதனை நிகழ்ச்சி
ADDED : ஏப் 23, 2024 02:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், உலக சிலம்ப சாதனை நிகழ்ச்சி நடந்தது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவை சேர்ந்த சிலம்ப வீரர்கள், 160க்கும் அதிகமானவர் பங்கேற்றனர். அலங்கார சிலம்பம், வளரி, கராத்தே, குத்து சண்டை போன்றவற்றை செய்து காட்டி, மாணவ, மாணவியர் அசத்தினர். சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி, கிரஹாம் பெல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. சிலம்ப வீரர்களுக்கு ஜெயந்தி பள்ளி தாளாளர் கிருஷ்ணன் பதக்கம் அணிவித்து, சான்றிதழ்கள் வழங்கினார். சிலம்ப நிகழ்ச்சியை செண்பக ராஜா, அந்தோணி பாஸ்டின், கார்த்திகேயன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.