sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

யார்னெக்ஸ் - டெக்ஸ் இந்தியா - டைகெம்: ஒரே இடத்தில் சங்கமித்த தொழில் கண்காட்சி பின்னலாடை துறை வலுப்படும்: திருப்பூருக்கு வளர்ச்சி வசப்படும்

/

யார்னெக்ஸ் - டெக்ஸ் இந்தியா - டைகெம்: ஒரே இடத்தில் சங்கமித்த தொழில் கண்காட்சி பின்னலாடை துறை வலுப்படும்: திருப்பூருக்கு வளர்ச்சி வசப்படும்

யார்னெக்ஸ் - டெக்ஸ் இந்தியா - டைகெம்: ஒரே இடத்தில் சங்கமித்த தொழில் கண்காட்சி பின்னலாடை துறை வலுப்படும்: திருப்பூருக்கு வளர்ச்சி வசப்படும்

யார்னெக்ஸ் - டெக்ஸ் இந்தியா - டைகெம்: ஒரே இடத்தில் சங்கமித்த தொழில் கண்காட்சி பின்னலாடை துறை வலுப்படும்: திருப்பூருக்கு வளர்ச்சி வசப்படும்


ADDED : செப் 12, 2024 11:27 PM

Google News

ADDED : செப் 12, 2024 11:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூரின் பசுமை சார் உற்பத்தி மற்றும் மறுசுழற்சி தொழில்நுட்ப எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், 'யார்னெக்ஸ்', 'டெக்ஸ் இந்தியா' மற்றும் 'டைகெம்' கண்காட்சிகள் துவங்கியுள்ளன.

பெங்களூரு எஸ்.எஸ்., டெக்ஸ்டைல் மீடியா நிறுவனம் சார்பில், லுாதியானா, டில்லி, கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, திருப்பூர் ஆகிய ஆறு கிளஸ்டர்களில், கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, 32 வது 'யார்னெக்ஸ்' கண்காட்சி, 18வது டெக்ஸ் இந்தியா கண்காட்சி, 5வது 'டை கெம்' கண்காட்சிகள், திருப்பூரில் நேற்று துவங்கியது.

திருமுருகன்பூண்டி ஐ.கே.எப்., வளாகத்தில் துவங்கிய கண்காட்சி, காலை, 10:00 மணி முதல், மாலை, 7:00 வரை, மூன்று நாட்களுக்கு நடக்க உள்ளது. கண்காட்சியை, ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளித்துறை திறன் கவுன்சில் தலைவர் சக்திவேல் திறந்து வைத்தார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், பொதுசெயலாளர் திருக்குமரன், துணை தலைவர் இளங்கோவன், 'பிராண்ட்' துணை கமிட்டி தலைவர் ஆனந்த், 'நிட்மா' தலைவர் ரத்தினசாமி உள்ளிட்டோர் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டனர்.

202 ஸ்டால்களில்...

----------------

நுாலிழைகளுக்கான,'யார்னெக்ஸ்' கண்காட்சி; பனியன் துணிகளுக்கான 'டெக்ஸ் இந்தியா' கண்காட்சி, சாயமிடும் சாயம் மற்றும் கெமிக்கல் வகைகளுக்கான 'டைகெம்' கண்காட்சிகளில், மொத்தம், 202 ஸ்டால்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத், பகதுர்கர், பெங்களூரு, பெல்லாரி, பில்வாரா, போபால், சண்டிகர், சென்னை, கொச்சி, திண்டுக்கல், ஈரோடு, கிர்தி, குர்கோவன், ஐதராபாத், இந்தோர், கரூர், கொல்கத்தா, லுாதியானா, மும்பை, மதுரை, மீரட் உட்பட, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன.

'பைபர்'கள், நுாலிழைகள், ஆடை மற்றும் துணி ரகங்கள், 'டிரிம்'கள், ஆடையலங்கார பொருட்கள், 'டைஸ்'கள், ரசாயன பொருட்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள், 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

மூங்கில், வாழை நார் மற்றும் பல்வேறு செடிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட 'பைபர்' மற்றும் நுாலிழைகள், பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பாலியஸ்டர் நுாலிழைகள், கட்டிங் வேஸ்ட் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்ட்ட நுாலிழை மற்றும் துணிரகங்கள், மறுசுழற்சி துணி ரகங்கள், விசைத்தறி தயாரிப்புகள், ஸ்டோன்ஸ், எம்பிராய்டரி மற்றும் தையல் நுால்கள் இடம்பெற்றுள்ளன.

---------------------------------

பட விளக்கம்

கண்காட்சி அரங்கில் இடம் பெற்ற செயற்கை நுாலிழை துணியை, ஆயத்த ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளித்துறை திறன் கவுன்சில் தலைவர் சக்திவேல் பார்வையிட்டார். அருகில், கண்காட்சி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், 'நிட்மா' தலைவர் அதில் ரத்தினசாமி உட்பட பலர்.

கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்ட தொழில் துறை பிரதிநிதிகள்.

அமெரிக்கா, நெதர்லாந்து, எகிப்து, ஹாங்காங், சீனா, கனடா, பெல்ஜியம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நிறுவனங்கள், நுாற்பாலைகள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன

திருப்பூருக்கு வரப்பிரசாதம்!

----------------------'யார்னெக்ஸ்' கண்காட்சியில், மறுசுழற்சி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட நுாலிழைகள், இயற்கை சார் உற்பத்தி நுாலிழைகள் இடம்பெற்றுள்ளன. பசுமை சார் உற்பத்தி மற்றும் புதிய தொழில்நுட்ப ஆடைகள், 'டெக்ஸ் இந்தியா' கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. அனைத்து வகையான சாயம், பிரின்டிங் பேஸ்ட், கெமிக்கல்ஸ், ஆசிட், சல்பர் உள்ளிட்ட பொருட்களுடன், 'டைகெம்' கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் பனியன் தொழில்துறையினரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கண்காட்சி அமைத்துள்ளது. ஏற்றுமதியாளர், உள்நாட்டு பனியன் ஆடை உற்பத்தியாளர், சாய ஆலைகள், பிரின்டிங் ஆலைகள், எம்பிராய்டரி ஆலைகள் என, அனைவரும் பார்த்து பயன்பெற வேண்டும். விவரங்களுக்கு, www.textilefairsindia.com என்ற இணையதளத்தில் தொடர்பு கொள்ளலாம்.- கிருஷ்ணமூர்த்தி கண்காட்சி அமைப்பாளர்








      Dinamalar
      Follow us