/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒயிலாட்டம்,கும்மி அரங்கேற்ற விழா
/
ஒயிலாட்டம்,கும்மி அரங்கேற்ற விழா
ADDED : ஆக 16, 2024 11:15 PM
பல்லடம்:பல்லடம் அருகேயுள்ள பருவாய் கிராமத்தில், கோவை ஸ்ரீஅம்மன் கலைக்குழு, ஸ்ரீ வெள்ளிங்கிரி ஆண்டவர் கலைக்குழு ஆகியவை இணைந்த, 59வது ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா, இரவு பருவாய் மாரியம்மன் கோவில் திடலில் நடந்தது.
ஒயிலாட்ட ஆசிரியர் நஞ்சுக்குட்டி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஒயிலாட்ட பாடகர் சுப்பிரமணி, தலைமை பயிற்சியாளர் கனகசபாபதி மற்றும் பாடகர் திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயிற்சி ஆசிரியர் நஞ்சுக்குட்டி கூறுகையில், ''38 பேர், கடந்த ஒரு மாதமாக ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்ட பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். வாரத்தில் ஐந்து நாட்கள் நடந்தது. இதற்கான அரங்கேற்ற விழா நடந்தது,'' என்றார்.
முன்னதாக, சிறுவர், சிறுமியர், இளம்பெண்கள், தாய்மார்கள் என, வயது வேறுபாடு இன்றி, 38 நடன கலைஞர்கள் சீருடையுடன் பங்கேற்று நடனமாடினர். பம்பை இசைக்கு ஏற்ப கலைஞர்கள் நடனமாடியது, கிராம மக்களை பெரிதும் கவர்ந்தது. தொடர்ந்து,3 மணி நேரம் நடந்த ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சியை மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கண்டுகளித்து, கைதட்டி ஆரவாரம் செய்து கலைஞர்களை உற்சாகப்படுத்தினர்.