/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இனி புகை வராமல் குப்பையை எரிக்கலாம்!
/
இனி புகை வராமல் குப்பையை எரிக்கலாம்!
ADDED : செப் 06, 2024 02:02 AM
திருப்பூர்:இன்றைய சூழலில், திருப்பூர் தொழிற்சாலைகளில், கழிவுகளை அப்புறப்படுத்துவது மிகவும் சவால் நிறைந்ததாக மாறியிருக்கிறது. தொழிற்சாலைகள் மட்டுமல்ல, ஓட்டல்கள், மருத்துவமனை, மகளிர் விடுதிகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவு, சானிடரி நாப்கின் மற்றும் அனைத்துவகை குப்பை மற்றும் மாநகராட்சி குப்பைகளை, சுற்றுச்சூழலுக்கு மாசுபடாமல் அப்புறப்படுத்த மிகுந்த சிரமப்படுகின்றனர்.
அதற்கான தீர்வை, அக்சரா டெக்ஸின் சொந்த தயாரிப்பான, 'கே.கே., வேஸ்ட் பர்னவுட் சிஸ்டம்' வழங்குகிறது. அனைத்து வகை குப்பைகளையும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு இல்லாமல், மிக பாதுகாப்பான முறையில் எரிக்கப்படுகிறது.
'இன்டகிராட்டேட் - ைஹ டெம்ப்ரேச்சலர் பைரோலிசிஸ் கேசிபிகேஷன்' தொழில்நுட்பத்தில், புகை இல்லாமல் குப்பை எரிக்கப்படுகிறது. இரண்டு சேம்பர்களின் மூலம், 500 டிகிரி - 1000 டிகிரி உயர் வெப்பநிலையில், எரிக்கும் போது, மாசுநிறைந்த புகை அடங்கிவிடும்.
மறுசுழற்சி செய்யப்படும் நீரை கொண்டு, 'வெட் ஸ்கிரப்பர்' உதவியுடன், நுண்ணிய துகள்களையும் கட்டுப்படுத்திவிட முடியும். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் கார்பன் மோனாக்சைடு, டையாக்சின் அண்ட் பியுரன்ஸ் போன்ற அனைத்து விதமான வாயுக்களும் கட்டுப்படுத்தப்படும். இது, 30 கிலோ, 50 கிலோ, 150 கிலோ, 300 கிலோ மற்றும் 500 கிலோ கொள்ளளவு உள்ளது.
'வேஸ்ட் பர்னவுட் சிஸ்டம்', என்.ஏ.பி.எல்., அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தின் மூலம் சான்றளிக்கப்பட்டுள்ளது. நேரில் பார்வையிட விரும்புவோர், பெருமாநல்லுார் அருகே உள்ள, கணக்கம்பாளையம் ஊராட்சி, நாதம்பாளையம் நத்தக்காடு தோட்டத்தில் (கதவு எண்3/266) உள்ள அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு, 78457 56601, 78458 56601, 96006 66601 என்ற எண்களில் அணுகலாம் என, அக்சரா டெக்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.