/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தலில் முறைகேடு புகார் தெரிவிக்கலாம்
/
தேர்தலில் முறைகேடு புகார் தெரிவிக்கலாம்
ADDED : மார் 28, 2024 05:13 AM

திருப்பூர் : 'திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான பொது, செலவின, போலீஸ் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புகார்கள் தெரிவிக்க நேரில் அல்லது மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் தொகுதியின் போலீஸ் பார்வையாளர்களாக, ராம்கிருஷ்ணா ஷரன்வர், பொது பார்வையாளர்களாக ஹிமான்சு குப்தா, செலவின பார்வையாளராக அசோக்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கலெக்டர் அலுவலக அறை எண், 1ல், ஹிமான் சுகுப்தா (89255 25683), அறை எண், 2ல், ராம்கிருஷ்ண ஷரவன்கர் (89255 25684), அறை எண், 3ல், அசோக்குமார் (89255 25682). பொது, போலீஸ் பார்வையாளர்களை மதியம் 12:00 முதல், 1:00 மணி வரையும், செலவின பார்வையாளரை, மாலை 3:00 முதல், 4:00 மணி வரையும், சந்தித்து, அல்லது மொபைல் போன் வாயிலாக புகார் தெரிவிக்கலாம் என, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.