/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இளம் விஞ்ஞானி பயிற்சி முகாம்; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு
/
இளம் விஞ்ஞானி பயிற்சி முகாம்; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு
இளம் விஞ்ஞானி பயிற்சி முகாம்; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு
இளம் விஞ்ஞானி பயிற்சி முகாம்; மாணவர்கள் பங்கேற்க அழைப்பு
ADDED : மார் 05, 2025 10:23 PM
உடுமலை; பள்ளி மாணவர்களுக்கு, இஸ்ரோவின் சார்பில் இளம் விஞ்ஞானி பயிற்சி முகாமில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்துவதற்காக, இஸ்ரோவின் 'யுவிகா' எனப்படும் இளம் விஞ்ஞானி பயிற்சி முகாம், ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
அவர்களின் அறிவியல் மற்றும் விண்வெளி ஆய்வு தொடர்பாக, ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கு இந்த முகாம் நடத்தப்படுகிறது.
முகாமில், மாணவர்களுக்கான செயல்விளக்க பயிற்சி, இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் நேரடியாக கலந்துரையாடுவதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
வரும் மே மாதம் நடக்கும் பயிற்சியில் பங்கேற்பதற்கான விண்ணப்ப பதிவு, தற்போது துவக்கப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள், https://jigyasa.iirs.gov.in/yuvika என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களின் முதற்கட்ட பட்டியல்,மார்ச் இறுதியில் வெளியிடப்படும். இறுதிக்கட்ட பட்டியல் ஏப்., முதல் வாரம் வெளியிடப்படுகிறது.
தேர்வு செய்யப்படுபவர்கள், திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், பெங்களூரு யு.ஆர்.செயற்கைகோள் மையம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஆராய்ச்சி நிறுவனம் உட்பட ஏழு மையங்களுக்கு அழைத்துச்செல்லப்படுகின்றனர்.
பயிற்சிக்கு விண்ணப்பிக்கவும், கூடுதல் தகவல்பெறவும் கலிலியோ அறிவியல் கழகம் 87782 01926 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.