ADDED : ஜூலை 23, 2024 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:காங்கயத்தில், 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காங்கயத்தை சேர்ந்த, 17 வயது சிறுமி. இவரது அக்கா கணவர் மூலமாக, தமிழரசன், 32 என்பவர் பழக்கமானார். சிறுமி பிஸ்கட் கம்பெனியில் வேலை செய்து வந்தார். சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்த வாலிபர், கடந்த ஏப்., மாதம் தமிழரசன் அவர் தங்கியிருந்த அறைக்கு அழைத்து சென்று, திருமணம் செய்து கொள்வதாக கூறி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதுகுறித்து புகாரின் பேரில், காங்கயம் அனைத்து மகளிர் போலீசார் தமிழரசனை 'போக்சோ' வில் கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.