sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 10 கி.மீ. துாரம் வாகன அணிவகுப்பு திணறிய தேசிய நெடுஞ்சாலை

/

 10 கி.மீ. துாரம் வாகன அணிவகுப்பு திணறிய தேசிய நெடுஞ்சாலை

 10 கி.மீ. துாரம் வாகன அணிவகுப்பு திணறிய தேசிய நெடுஞ்சாலை

 10 கி.மீ. துாரம் வாகன அணிவகுப்பு திணறிய தேசிய நெடுஞ்சாலை

2


ADDED : ஜன 19, 2026 06:31 AM

Google News

ADDED : ஜன 19, 2026 06:31 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: பல்லடத்தில், 10 கி.மீ., துாரம் வாகன அணிவகுப்பு நடந்ததால், தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலால் திணறியது.

பொங்கல் பண்டிகை முடிந்து இன்று முதல் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளன. பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் சென்றவர்கள், விடுமுறை முடிந்து ஊருக்கு திரும்பி வருகின்றனர். அவ்வாறு, சொந்த ஊர் சென்று திரும்பும் வாகனங்களால், பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன அணிவகுப்பு நடந்தது.

கோவை-, திருச்சியை இணைக்கும் பல்லடம் தேசிய நெடுஞ்சாலை, தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளது. திருப்பூர், கோவை மாவட்டப் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்ட தொழிலாளர்கள், சொந்த ஊர் சென்று விட்டு நேற்று ஊருக்கு திரும்பினர்.

இதன் காரணமாக, பல்லடம் தேசிய நெடுஞ்சாலையில், கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சி ரோடு, மாதப்பூர் முதல் கோவை ரோடு பெரும்பாளி வரை, 10 கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு, பொள்ளாச்சி ரோடு, நால்ரோடு சிக்னல், மாணிக்காபுரம் ரோடு, செட்டிபாளையம் ரோடு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இருப்பினும், வாகனங்கள் பேரணி நடத்தியது போல் அணிவகுத்து வந்ததால், போலீசாரால் சமா ளிக்க முடியவில்லை. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்தபடியே சென்றன.

ஒவ்வொரு பண்டிகை விசேஷ காலங்களிலும், பல்லடத்தில் இது ஒரு தீராத தலைவலியாகவே இருந்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு என்று தான் தீர்வு கிடைக்குமோ என பல்லடம் மக்கள் புலம்பி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us