ADDED : ஜூன் 20, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில் : வெள்ளகோவில் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட காவிலிபாளையத்தில் சேவல்களை வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட செந்தில்குமார், 40, சிவக்குமார், 22, கார்த்திக், 25, மகேந்திரன், 24, கார்த்திக், 22, பெரியசாமி, 50, குமரேசன், 28, ஜெயபால், 47, பொன்னுசாமி, 39, ரவி, 44 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, மூன்று சேவல் பறிமுதல் செய்யப்பட்டது.