/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நுாறு சதவீதம் வருகை; மாணவர்களுக்கு பாராட்டு
/
நுாறு சதவீதம் வருகை; மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மார் 27, 2025 12:27 AM
திருப்பூர்; பள்ளியில், நுாறு சதவீதம் வருகையை பதிவுசெய்த மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கே.ஜி., முதல், 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரில், 180க்கும் மேற்பட்டவர்கள், பள்ளி துவங்கிய முதல் நாளில் இருந்து, விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்துள்ளனர். மாணவ, மாணவியரின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு பரிசுகள் மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், பள்ளி தலைவர் தியாகராஜன்,செயலாளர் செந்தில்நாதன், பொருளாளர் சந்திரசேகர், பள்ளி தாளாளர் பாலசுப்ரமணியம், பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியர், ஆசிரியைகள்,பெற்றோர் மற்றும் மாணவ, மாணவியர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.