/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
100 நாள் திட்ட தொழிலாளர் கண்ணீர்
/
100 நாள் திட்ட தொழிலாளர் கண்ணீர்
ADDED : ஏப் 21, 2025 11:21 PM

பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சி, பொன் நகர், அல்லாளபுரம், அக்கரையாம்பாளையம், அய்யம்பாளையத்தை சேர்ந்த ஏராளமானோர் நுாறுநாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்துவருகின்றனர். கடந்த 2024, நவ., டிச., மற்றும் 2025 ஜன., மாத சம்பளம் வழங்கப்படவில்லை.
குறைதீர் கூட்டத்தில், நுாறுநாள் வேலை திட்ட பெண் தொழிலாளர் 40 பேர் மனு அளித்தனர்.
அவர்கள் கூறியதாவது:இத்திட்டம் மூலம் வேலைவாய்ப்பு இல்லாத பெண்கள், ஆதரவற்றோர், முதியவர்கள் என ஏராளமானோர் வேலை வாய்ப்பு பெற்றுவருகிறோம்.
கையில் கடப்பாரை, மண்வெட்டி பிடித்து, உயர்வை சிந்தி உழைத்த எங்களுக்கு உரிய சம்பள தொகையை முறையாக வழங்கவில்லை. ஒவ்வொருவருக்கும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். அதிகாரிகளிடம் கேட்டால், இழுத்தடிக்கின்றனர். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
நிலுவை சம்பளம் வழங்காத நிலையில், மீண்டும் வேலைக்கு வருமாறு அழைக்கின்றனர்; எங்களால் எப்படி வேலைக்குச் செல்லமுடியும்? நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்.