/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
100 நாளில் தீர்வு: புகார் பெட்டி மனு என்னாச்சு? கலெக்டரிடம் பா.ஜ.,வினர் மனு
/
100 நாளில் தீர்வு: புகார் பெட்டி மனு என்னாச்சு? கலெக்டரிடம் பா.ஜ.,வினர் மனு
100 நாளில் தீர்வு: புகார் பெட்டி மனு என்னாச்சு? கலெக்டரிடம் பா.ஜ.,வினர் மனு
100 நாளில் தீர்வு: புகார் பெட்டி மனு என்னாச்சு? கலெக்டரிடம் பா.ஜ.,வினர் மனு
ADDED : மார் 12, 2024 01:39 AM

திருப்பூர்;இரண்டு ஆண்டுகளாகியும் மக்கள் குறை தீர்க்கப்படாததை கண்டித்து, புகார் மனு பெட்டியுடன் வந்து, பா.ஜ.,வினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
பா.ஜ., திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்தி தலைமையிலான அக்கட்சியினர், 100 நாள் குறைதீர்க்கும் புகார் பெட்டி, இரண்டு ஆண்டு ஆட்சியில் குறை தீர்ந்துவிட்டதா; இதுதான் தி.மு.க., அரசின் சாதனையா என எழுதிய புகார் பெட்டியை ஏந்தி வந்து, கலெக்டரிடம் மனு அளித்தனர்.
பா.ஜ.,வினர் கூறியதாவது:
ஆட்சிக்கு வந்தால், நுாறு நாட்களில் மக்களிடமிருந்து பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது தீர்வு காணப்படும் என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உறுதியளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டாகியும் மக்கள் பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.
கடைநிலை ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை லஞ்சம் வாங்கு கின்றனர். ஸ்கேனுக்கு, 100 முதல் 500 ரூபாய் வரை கொடுக்க வேண்டியுள்ளது.
பணம் கொடுக்காவிடில், ஸ்கேன் எடுக்க காலதாமதம் செய்கின்றனர். பிரேத பரிசோதனைக்கு, 2 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்க வேண்டியுள்ளது. இலவச ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்த, 2 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்க வேண்டியுள்ளது. மருத்துவமனையில், கழிப்பிடங்களை பூட்டி வைத்துள்ளனர்.
அரசு மருத்துவமனையில் நிர்வாக சீர்கேடு மற்றும் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும். இல்லாவிடில், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

