ADDED : ஏப் 07, 2026 11:24 PM

அவிநாசி:தேர்தலை முன்னிட்டு அவிநாசி நகராட்சி சார்பில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் விதமாக, ஊர்வலம் மற்றும் கோலங்கள் வரைந்து, வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தல், 23ம் தேதி நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு, வாக்காளர்களுகு்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவிநாசி நகராட்சி சார்பில, துாய்மை பணியாளர்கள், அலுவலர்ள் பங்கேற்ற ஊர்வலம், புதிய பஸ் ஸ்டாண்டில் துவங்கி, நகராட்சி அலுவலகம் வரை நடைபெற்றது. முன்னதாக, புதிய பஸ் ஸ்டாண்டில், பெண் துாய்மை பணியாளர்கள், பல வண்ணங்களில் ரங்கோலி வரைந்து அசத்தினர்.
அதன்பின், 'எனது இந்தியா... எனது வாக்கு 'என்ற கையெழுத்து இயக்கம் மற்றும் வலுவான இந்தியா உருவாக்குவோம் என்ற மொபைல் போன் செல்பி பாயின்ட் ஆகியவை வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தங்களது வாக்குரிமை குறித்து முக்கியத்துவத்தை உணர்த்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், நகராட்சி கமிஷனர் அனுநந்தினி, நகராட்சி தலைவர் தனலட்சுமி, சுகாதார ய்வாளர் அரவிந்தன் மற்றும் மேற்பார்வையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
