/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
10 ஆயிரம் மரக்கன்று நடும் திட்டம் 'வனத்துக்குள் திருப்பூர்' பங்களிப்பு

ADDED : டிச 06, 2024 04:51 AM
திருப்பூர் : அரசூரில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய பங்களிப்பை 'வனத்துக்குள் திருப்பூர்' அமைப்பினர் வழங்கியுள்ளனர்.
தமிழக அரசின் தல மரக்கன்றுகள் நடும் திட்டம், மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் குறுங்காடுகள் திட்டம் ஆகியவற்றின் கீழ், கோவை சாந்தி கியர்ஸ் நிறுவனம் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் திட்டம், அரசூர் கானவேடப் பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் துவங்கப்பட்டது.
இத்திட்டத்துக்கு திருப்பூரில் செயல்பட்டு வரும் வெற்றி அமைப்பு - 'வனத்துக்குள் திருப்பூர்' அமைப்பினர் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
வனத்துறை சார்பில் வழங்கிய மரக்கன்றுகளைப் பெற்று வந்து, திட்டம் மேற்கொள்ளும் இடத்தில் குழி தோண்டி, மரக்கன்றுகள் நடும் பணியை இந்த அமைப்பு மேற்கொண்டது. 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின், பங்களிப்பை பல தரப்பினரும் பாராட்டினர்.