sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

எடையளவு விதிமுறை மீறல்; 102 நிறுவனங்கள் சிக்கின

/

எடையளவு விதிமுறை மீறல்; 102 நிறுவனங்கள் சிக்கின

எடையளவு விதிமுறை மீறல்; 102 நிறுவனங்கள் சிக்கின

எடையளவு விதிமுறை மீறல்; 102 நிறுவனங்கள் சிக்கின


ADDED : அக் 08, 2025 11:57 PM

Google News

ADDED : அக் 08, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; கடந்த செப்டம்பர் மாதம், தொழிலாளர் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், எடையளவு, பொட்டல பொருட்கள் விதிகளை மீறிய, 102 நிறுவனங்கள் சிக்கியுள்ளன.

திருப்பூர் மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) காயத்ரி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், எடையளவு, முத்திரை, மறு முத்திரை இடப்படாத எடையளவு பயன்பாடு, மறு பரிசீலனை சான்று வைக்கப்படாதது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வுகளில், எடையளவு தொடர்பாக, 32 நிறுவனங்கள்; பொட்டல பொருட்கள் விதியை பின்பற்றாதது, அதிகபட்ச விலையைவிட கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை உள்ளிட்ட ஏழு முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

கடைகள், வணிகம், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மருத்துவமனைகளில், தொழிலாளர் நல சட்டங்களை மீறிய 63 நிறுவனங்கள் என, மொத்தம் 102 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச கூலி வழங்காத ஆறு நிறுவனங்களின் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டு, 1.85 லட்சம் ரூபாய் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

குழந்தை தொழிலாளர் குறித்த புகார்களை, Pencil Portal தளத்திலும்; 1098 என்கிற கட்டமில்லாத எண்ணிலும்; கூடுதலாக ஏற்படத்தப்பட்டுள்ள 155514, 112 எண்களில் தெரிவிக்கலாம்; எடையளவு சட்டம் தொடர்பான புகார்களை, 1915 மற்றும் 1800114000 என்கிற எண்ணில் தெரிவிக்கலாம் என, தொழிலாளர் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பங்களிப்பு செலுத்த வேண்டும் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணி அமர்த்திய நிறுவனங்கள், ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு தொழிலாளிக்கும், தொழிலாளியின் பங்களிப்பாக 20 ரூபாய்; நிறுவனத்தின் பங்களிப்பாக 40 ரூபாய் என, மொத்தம் 60 ரூபாயை, தொழிலாளர் நலவாரியத்தில், இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும். - தொழிலாளர் துறை அதிகாரிகள்.








      Dinamalar
      Follow us