/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மொழித்தாள் தேர்வுகள் 1,059 பேர் எழுதவில்லை
/
மொழித்தாள் தேர்வுகள் 1,059 பேர் எழுதவில்லை
ADDED : ஏப் 04, 2025 03:24 AM
திருப்பூர்; பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மொழித்தாள் தேர்வில், 1,059 பேர் பங்கேற்வில்லை.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 28ம் தேதி துவங்கியது. முதல் நாள் தமிழ்த்தேர்வு நடந்தது. தமிழ் தேர்வெழுத, 29 ஆயிரத்து, 899 பேர் தகுதியான நிலையில், 438 பேர் தேர்வெழுத வரவில்லை. 56 பேர் விலக்கு பெற்றிருந்தனர்; 29 ஆயிரத்து, 405 பேர் தேர்வெழுதினர்.
இம்மாதம், 2ம் தேதி, ஆங்கிலத்தேர்வு நடந்தது. ஆங்கிலத் தேர்வெழுத, 29 ஆயிரத்து, 887 பேர் தகுதியானவர்கள்; 361 பேர் தேர்வெழுத வரவில்லை; 204 பேர் விலக்கு பெற்றிருந்தனர். 29 ஆயிரத்து, 322 பேர் தேர்வெழுதினர்.
திருப்பூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வை, 494 பேரும், ஆங்கிலத்தேர்வை, 565 பேரும் எதிர்கொள்ளவில்லை. மொத்தமாக மொழித்தாள் தேர்வை, 1,059 பேர் எதிர்கொள்ளவில்லை. வரும், 7ம் தேதி கணிதம், 11ம் தேதி அறிவியல் தேர்வுகள் நடக்கிறது. 15ம் தேதி சமூக அறிவியல் தேர்வுடன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைகின்றன.

