/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாளை முதல் 10ம் வகுப்பு ஹால் டிக்கெட்
/
நாளை முதல் 10ம் வகுப்பு ஹால் டிக்கெட்
ADDED : மார் 18, 2024 11:58 PM
திருப்பூர்:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் மாணவர்கள் நாளை (20 ம் தேதி) தங்களுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும், 26ம் தேதி துவங்குகிறது. ஏப்ரல், 8ம் தேதி நிறைவு பெறுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 31 ஆயிரத்து, 893 பேர் பத்தாம் வகுப்பு தேர்வெழுத உள்ளனர்.
தேர்வுகள் துறை விடுத்துள்ள அறிவிப்பில், 'பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் மாணவ, மாணவியர் ஹால்டிக்கெட்டை வரும், 20 ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,' என அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து, ஓரிரு நாளில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

