/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
11 புதிய மஞ்சள் நிற பஸ் திருப்பூருக்கு வந்தாச்சு!
/
11 புதிய மஞ்சள் நிற பஸ் திருப்பூருக்கு வந்தாச்சு!
ADDED : ஜன 06, 2024 12:27 AM
திருப்பூர்;திருப்பூரில் இருந்து, பிற பகுதிகளுக்கு, 11 புதிய மஞ்சள் நிற பஸ்கள் இயக்கப்படுகிறது.
மஞ்சள் நிற பஸ்களை அரசு போக்குவரத்து கழகம், டிச., துவக்கத்தில் அறிமுகப்படுத்தியது. பரீட்சார்த்த முறையில், ஒவ்வொரு கோட்டம், கிளைகளுக்கு, பிரத்யேக பாதைகளில், பத்து சதவீதம் பஸ்கள் வழங்கப்படுகிறது.
அவ்வகையில், திருப்பூரில் இருந்து பல்லடம் வழியாக கோவைக்கு இரண்டு பஸ்கள், திண்டுக்கல், பொள்ளாச்சி, ஈரோடு வழி மேட்டூர், உடுமலை, பழநி, தேனி, சேலம், ஈரோடு - திருப்பூர் - பழனி என, 11 வழித்தடங்களுக்கு, மஞ்சள் நிற பஸ்கள் தருவிக்கப்பட்டுள்ளது. கடந்த, 4 ம் தேதி முதல் இந்த பஸ்கள் மத்திய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட், கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.