/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறப்பு டாக்டர் இல்லாமல் தடுமாறும் 11 அரசு மருத்துவ கல்லுாரிகள்
/
சிறப்பு டாக்டர் இல்லாமல் தடுமாறும் 11 அரசு மருத்துவ கல்லுாரிகள்
சிறப்பு டாக்டர் இல்லாமல் தடுமாறும் 11 அரசு மருத்துவ கல்லுாரிகள்
சிறப்பு டாக்டர் இல்லாமல் தடுமாறும் 11 அரசு மருத்துவ கல்லுாரிகள்
ADDED : மார் 14, 2026 05:58 AM
திருப்பூர்: கடந்த 2022ல் துவங்கப்பட்ட நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட, 11 அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர், சிறப்பு டாக்டர்கள் பணியிடங்கள், நான்கு ஆண்டுகளாகியும் நிரப்பபடாமல் உள்ளன.
கடந்த, 2022ல், திருப்பூர், நீலகிரி, திருவள்ளூர், நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, அரியலுார், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் ஆகிய, 11 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் துவங்கப்பட்டன.
இவற்றில், புறநோயாளிகள் பிரிவில் பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரம், சிறுநீரக கோளாறு, இரைப்பை, குடல் மருத்துவம், உயர் அறுவை சிகிச்சை நிபுணர்கள், தமனி, வாஸ்குலர் அறுவை சிகிச்சை, குழந்தைகள் பிறப்பு குறைபாடு உள்ளிட்ட பிரச்னை தொடர்பாக சிகிச்சை அளிக்க, நான்கு ஆண்டுகளாக சிறப்பு டாக்டர்கள் நியமிக்கப்படவில்லை.
விபத்தில் தலைக்காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கவும், மூளை நரம்பியல் தொடர்பான உயர் சிகிச்சைக்கும், அறுவை சிகிச்சை நிபுணர் முழுமையாக இல்லாததால், உடனடி அவசர சிகிச்சை தேவைப்படுவோர், குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை எதிர்பார்ப்போர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த, 11 அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இருந்து, மேல்சிகிச்சை தேவைப்படுவோர், பிற உயர் சிகிச்சை தரும் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டிய நிலையே இன்றும் உள்ளது.
விரைவில் சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பு வெளிவரும் சூழலில், அதற்கு முன்னதாகவே, 11 புதிய அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தமிழக அரசு சிறப்பு டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

