தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

11 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

11 தாசில்தார்கள் பணியிட மாற்றம்


UPDATED : ஜூன் 14, 2026 05:23 PM

ADDED : ஜூன் 14, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2026 05:23 PM ADDED : ஜூன் 14, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி 11 தாசில்தார்கள் மற்றும் 29 துணை தாசில்தார்களுக்குப் பணியிட மாறுதல் வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

வருவாய்த்துறையில் பணியாற்றிய இரண்டு துணை தாசில்தார்களுக்குத் தற்காலிக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நீதித்துறை பயிற்சி முடித்த ராசேந்திர பூபதி, தாராபுரம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாராகவும்; கோபால், காங்கயம் ஆதிதிராவிடர் நல தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், தாசில்தார் ரம்யா மடத்துக்குளம் தாசில்தாராகவும்; புஷ்பராஜன் திருப்பூர் தெற்கு தாசில்தாராகவும்; தாராபுரம் தனி தாசில்தாராக இருந்த கார்த்திகேயன் உடுமலை ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கு நேர்முக உதவியாளராக இருந்த அருணா, உடுமலை தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.

திருப்பூர் தெற்கு தாசில்தாராக இருந்த சரவணன், திருப்பூர் வடக்கு குடிமைப்பொருள் தனி தாசில்தாராகவும்; திருப்பூர் கோட்ட கலால் அலுவலர் ஜெயக்குமார் டாஸ்மாக் கணக்கு மேலாளராகவும்; தனி தாசில்தார் முரளி திருப்பூர் தெற்கு சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மடத்துக்குளம் தாசில்தாராக இருந்த குணசேகரன் திருப்பூர் கோட்ட கலால் அலுவலராகவும்; உடுமலை தாசில்தார் கவுரிசங்கர் தாராபுரம் முத்திரைகள் தனி தாசில்தாராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் சேர்த்து, மாவட்ட அளவில் நீதித்துறை பயிற்சி முடித்து வந்தவர்கள் உட்பட மொத்தம் 29 துணை தாசில்தார்களும் வெவ்வேறு இடங்களுக்குப் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us