/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஐந்து தலைமுறை கண்ட 110 வயது மூதாட்டி மரணம்
/
ஐந்து தலைமுறை கண்ட 110 வயது மூதாட்டி மரணம்
ADDED : மார் 20, 2025 12:43 AM

பல்லடம்: பல்லடம் அருகே, 110 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, ஐந்து தலைமுறையை சேர்ந்த உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்தனர்.
பல்லடம் அருகேயுள்ள பூமலுார் ஊராட்சி, மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமாத்தாள், 110. கணவர் முத்துசாமி. விவசாயியான இவர், கடந்த, 22 ஆண்டுக்கு முன் காலமானதை தொடர்ந்து, ராமாத்தாள், தனது மகன்களுடன் பூமலுார் கிராமத்தில் வசிக்கிறார்.
முத்துசாமி -- ராமாத்தாள் தம்பதியருக்கு, 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மருமகன், மருமகள் 4 பேர் உட்பட, பேரன்கள் 10, பேத்திகள் 9, கொள்ளு பேரன்கள் 9, கொள்ளு பேத்திகள் 10 மற்றும் எள்ளு பேரன் 1 என, மொத்தம், 44 பேர் இவர்களின் வாரிசுகளாக உள்ளனர்.
ராமாத்தாள், நல்ல உடல் நலத்துடன் எழுந்து நடந்தபடி ஆரோக்கியமாக இருந்துள்ளார். கடந்த, 2013ம் ஆண்டு இவருக்கு சதாபிஷேக விழா கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வயது மூப்பால் நேற்று காலமான மூதாட்டியின் இறுதிச் சடங்கில்,ஐந்து தலைமுறையை சேர்ந்த வாரிசுகள், உறவினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.