ADDED : பிப் 13, 2024 01:23 AM

பல்லடம்:பல்லடம் தாலுகாவில், 1.15 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்ட பணிகள் நேற்று மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.
கோவை எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நடந்த திட்டப் பணிகளுக்கான திறப்பு விழாவுக்கு எம்.பி., நடராஜன் தலைமை வகித்தார். தி.மு.க., ஒன்றிய பொறுப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம், ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, பி.டி.ஓ., கனகராஜ், சித்தம்பலம் ஊராட்சித் தலைவர் ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அமராவதிபாளையம், சேகாம்பாளையம், வேலம்பாளையம், பூமலுார், புள்ளியப்பம்பாளையம், கேத்தனுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அங்கன்வாடி மையம், சோலார் மின் விளக்கு, சமுதாயக்கூடம், நிழல் குடை, மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளிட்ட, 1.15 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு திறப்பு விழா நடந்தது.