/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் 1.16 லட்சம் விண்ணப்பங்கள்
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் 1.16 லட்சம் விண்ணப்பங்கள்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் 1.16 லட்சம் விண்ணப்பங்கள்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் 1.16 லட்சம் விண்ணப்பங்கள்
ADDED : ஆக 17, 2025 11:43 PM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முதல் கட்ட முகாம்களில், 1.16 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட முகாம், நாளை துவங்குகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், முதல் கட்டமாக, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், கடந்த ஜூலை 15ல் துவங்கி, கடந்த 14ம் தேதி வரை நடந்தது. மொத்தம் நடந்த 120 முகாம்களில், 15 அரசு துறை சார்ந்த 46 வகை சேவைகள் அளிக்கப்படுகிறது. விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு, தீர்வு காண்பதற்காக அந்தந்த துறையினருக்கு அனுப்பப்பட்டன. மொத்தம் 1 லட்சத்து 16 ஆயிரத்து 191 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு முகாமில், 10க்கும் மேற்பட்ட சிறப்பு கவுன்டர் அமைக்கப்பட்டு, பெண்களிடமிருந்து மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுவருகிறது. இதற்குத்தான் அதிக கூட்டம் திரண்டது. மொத்த விண்ணப்பங்களில் 47 சதவீதம், அதாவது, 54 ஆயிரத்து 620 விண்ணப்பங்கள், உரிமைத்தொகை கோருபவை.
ஏற்கனவே இ-சேவை மூலமாகவும், நேரடியாகவும் சான்றுகள் மற்றும் இதர சேவைகளுக்காக விண்ணப்பித்துவிட்டு, பல நாட்கள், மாத கணக்கில் காத்திருக்கும் நிலை, புரோக்கர்கள் தலையீடு, வீண் அலைச்சலை மக்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது. மாவட்டத்தில், மகளிர் உரிமைத்தொகை கோருபவை நீங்கலாக, 61 ஆயிரத்து 571 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில், 20.17 சதவீதம், அதாவது 12 ஆயிரத்து 419 விண்ணப்பங்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது.