ADDED : மார் 17, 2024 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி:அவிநாசி - ஈரோடு ரோடு, ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே உள்ள மளிகை கடையில் போலீசார், சோதனை செய்தனர்.
கடையில், புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. 12 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் கடை உரிமையாளர்கள் செந்தில்குமார், 25, கவுதம், 22 ஆகியோரை கைது செய்தனர்.

