/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெருநாய் கடித்ததில் 12 செம்மறி ஆடு பலி
/
தெருநாய் கடித்ததில் 12 செம்மறி ஆடு பலி
ADDED : மார் 29, 2025 11:24 PM
திருப்பூர்: தெருநாய்கள் தாக்கியதில், ஊத்துக்குளி வெங்கலப்பாளையம் அருகே, 12 செம்மறி ஆடுகள் பலியாகின.
காங்கயம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில், கூட்டமாக வரும் தெருநாய்கள், ஆட்டு பட்டிக்குள் புகுந்து, ஆடுகளை கடித்து குதறி கொன்றுவிடுகின்றன. விவசாயிகள், தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஊத்துக்குளி தாலுகா, வெங்கலப்பாளையம் அடுத்துள்ள பாப்பம்பாளையத்தில், ராமசாமி என்பவருக்கு சொந்தமான வீரியன்தோட்டம் பகுதியில், பட்டிக்குள் புகுந்த தெருநாய்கள் தாக்கியதில், 12 செம்மறி ஆடுகள் பலியாகின; 15 செம்மறி ஆடுகள் காயமடைந்துள்ளன.
கால்நடைத்துறை டாக்டர்கள், ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தனர்; கால்நடைத்துறை அதிகாரிகளும், வருவாய்த்துறையினரும் நேரில் பார்வையிட்டு, பாதிப்புகளை பதிவு செய்துள்ளனர்.

