ADDED : பிப் 13, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில்;வெள்ளகோவில் வீரக்குமாரசுவாமி கோவில் உண்டியல் திறக்கப்பட்டதில், 12 லட்சத்து, 27 ஆயிரம் ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
வெள்ளகோவிலில் ஹிந்து அறநிலையத்துறையின் கீழ், வீரக்குமாரசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், கடந்த ஆண்டு செப்., 29ம் தேதி உண்டியல் திறக்கப்பட்டது.
நேற்று உண்டியல் திறக்கப்பட்டு பணம் எண்ணும் பணி ஹிந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் உதவி கமிஷனர் ஜெயதேவி தலைமையில் செயல் அலுவலர் ராமநாதன், எழுத்தர் சிவக்குமார் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடந்தது. உண்டியலில், ரொக்கமாக, 12 லட்சத்து, 27 ஆயிரத்து, 174 ரூபாய், தங்கம், 35 கிராம், வெள்ளி, 112 கிராமும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றன.