/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
127 ஆண்டு பழமையான சுமைதாங்கி கல் திருப்பூரில் கண்டுபிடிப்பு
/
127 ஆண்டு பழமையான சுமைதாங்கி கல் திருப்பூரில் கண்டுபிடிப்பு
127 ஆண்டு பழமையான சுமைதாங்கி கல் திருப்பூரில் கண்டுபிடிப்பு
127 ஆண்டு பழமையான சுமைதாங்கி கல் திருப்பூரில் கண்டுபிடிப்பு
ADDED : மார் 13, 2024 01:56 AM

திருப்பூர்;திருப்பூரில், கல்வெட்டுடன் கூடிய, 127 ஆண்டுகள் பழமையான சுமைதாங்கி கல் கண்டறியப்பட்டுள்ளது.
பண்டைய தமிழ் சமூகம், வீரத்தை மிக உயர்வாக போற்றியது. அதே அளவுக்கு, விருந்தோம்பல் பண்புடன், சக மனிதர், கால்நடைகள் மீது அன்பு செலுத்தியது தொடர்பான வரலாற்று ஆதாரங்களும் கிடைத்துள்ளன. சக மனிதர் பசியுடன் இருக்க கூடாது என்பதற்காக, அன்னசத்தியம், நீர்மோர் பந்தல், இரவில் தங்கும் மடங்கள் கட்டி வைத்தனர்.
விளைவிக்கப்பட்ட பொருட்களை ஒரே இடத்தில் விற்கும் சந்தைகள் உருவான பிறகு, மாட்டு வண்டிகள் மற்றும் தலைச்சுமையாக, சந்தைக்கு பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டன. தலையில் சுமையுடன் மைல் கணக்கில் நடந்து செல்ல வேண்டியிருந்தது. இடையே இளைப்பாறி, ஓய்வெடுக்கும் இடங்கள் உருவாக்கப்பட்டன. அதில், தலைச்சுமையை இறக்கி வைத்து, எடுத்துச்செல்ல வசதியாக, சுமைதாங்கி கற்கள் நிறுவப்பட்டன.
குறிப்பாக, இறந்த கர்ப்பிணியின் நினைவாக, சுமைதாங்கி கற்கள் அமைப்பது வழக்கமாக இருந்துள்ளது. அத்தகைய பழமையான, கல்வெட்டுடன் கூடிய சுமைதாங்கி கற்கள், திருப்பூரில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது:
திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடக்கும் வாரச்சந்தையும், வைகாசி மாதத்தில் நடக்கும் தேர் சந்தையும் கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்றவை. இங்கிருந்து பொருட்கள் வாங்கி செல்லும் மக்கள் பயன்படுத்த, தென்னம்பாளையம் கோவில் மைதானத்தில், 127 ஆண்டுகளுக்கு முன் அமைத்த சுமைதாங்கி கல் கண்டறியப்பட்டது.சாலை விரிவாக்கத்தின் போது கலைந்து விட்டது. மொத்தம், 13 வரிகள் கொண்ட தமிழ் எழுத்துக்களுடன் கூடிய சுமைதாங்கி கல் கண்டறியப்பட்டது. கடந்த, 1897ல், 90 செ.மீ., உயரமும், 50 செ.மீ., அகலமும் கொண்ட கல்லில், 'ேஹவிளம்பி ஆண்டில், பங்குனி 19ம் தேதி, ரங்கபோயன் மகன் கருப்ப போயன் அமைத்த சுமைதாங்கி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்க்கையில், கொங்கு மண்டல மக்களின் சமத்துவ பண்பையும், குணத்தையும் நாம் உணர முடிகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.

