தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/காய்ச்சல் தடுப்புக்கு 13 குழுக்கள்

காய்ச்சல் தடுப்புக்கு 13 குழுக்கள்

காய்ச்சல் தடுப்புக்கு 13 குழுக்கள்


UPDATED : அக் 05, 2026 12:28 AM

ADDED : அக் 05, 2026 12:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:28 AM ADDED : அக் 05, 2026 12:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: வெயில், திடீர் மழை, மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் நிலவும் குளிர் என மாறிவரும் சீதோஷ்ண நிலையால் திருப்பூரில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் சராசரியாக இருவருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு வரும் நிலையில், காய்ச்சல் பாதித்தவர்களின் உடல்நிலையை சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, திருப்பூர் சுகாதார மாவட்டத்தில் 13 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் டாக்டர், செவிலியர், மருத்துவ உதவியாளர், ஆய்வக நுட்புநர் உள்ளிட்ட 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழுவினர் நடமாடும் குழுக்களாக செயல்பட்டு, காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்துவதுடன், கொசு மற்றும் லார்வா ஒழிப்பு உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கை களையும் மேற்கொள்வர். திருப்பூர் சுகாதார மாவட்டத்தில் 13 வட்டாரங்கள் உள்ளதால், ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு குழு வீதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி கூறுகையில், ‘‘மழைநீர் தேங்கும் இடங்களில் கொசுக்கள் பெருகுவதால் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, வீடுகளை யும் சுற்றுப்புறங்களையும் துாய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் குறையாமல் நீடிப்பது, வயிற்று வலி, முதுகுவலி, சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்’’ என்றார்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் மற்றும் பருவகால நோய்களுக்கான மருந்துகள் போதிய அளவில்இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us