ADDED : டிச 09, 2024 05:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்ட சக்ஷம் அமைப்பு சார்பில், மங்கலம் ரோடு ஸ்ரீரத்தினவிநாயகர் கோவில் மண்டபத்தில், செயற்கை கால் அளவீடு முகாம் நேற்று நடந்தது. 14 மாற்றுத்திறனாளிகளுக்கு அளவீடு செய்யப்பட்டது. கடந்த மாதம் அளவீடு செய்த, 13 நபர்களுக்கு செயற்கை கால் வழங்கப்பட்டது.
மாவட்ட தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். ஸ்ரீதரா டெக்ஸ்டைல் நிறுவன மேலாண் இயக்குனர் பிரேம் பிரகாஷ் சிக்கா, நண்பர்கள் நற்பணி மன்ற நிர்வாகி வெங்கடாசலம் உள்ளிட்டோர், செயற்கை அவயங்களை வழங்கினர்.
பூச்சக்காடு தம்பி நண்பர்கள் நற்பணி மன்றத்துடன் இணைந்து, இலவச கண் பரிசோதனை முகாம், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் பரிசோதனை முகாம், பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவில் மண்டபத்தில் நேற்று நடந்தது. ஏராளமானோர் பரிசோதனை செய்துகொண்டனர்.