/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விநாயகர் சிலைகள் நாளை ஊர்வலம் பாதுகாப்பு பணியில் 1,300 போலீசார்
/
விநாயகர் சிலைகள் நாளை ஊர்வலம் பாதுகாப்பு பணியில் 1,300 போலீசார்
விநாயகர் சிலைகள் நாளை ஊர்வலம் பாதுகாப்பு பணியில் 1,300 போலீசார்
விநாயகர் சிலைகள் நாளை ஊர்வலம் பாதுகாப்பு பணியில் 1,300 போலீசார்
ADDED : ஆக 28, 2025 11:16 PM

திருப்பூர், ; திருப்பூரில் ஹிந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 1100 விநாயகர் சிலைகள் நாளை பிரதிஷ்டை செய்யப் படுகின்றன. விநாயகர் சிலை ஊர்வலத்தில், 1, 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருப்பூரில், ஹிந்து முன்னணி, ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், மாவட்டம், முழுதும், 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. வரும், 31ம் தேதி, பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள், ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருப்பூரில் மாநகர போலீசார், பிற மாவட்ட போலீசார், பட்டாலியன் போலீசார், ஊர்க்காவல் படையினர் என, 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூடுதலாக, இரண்டு கம்பெனி பட்டாலியன் போலீசார், வெளி மாவட்ட போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர். முக்கிய இடங்களில் 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஊர்வலத்தையொட்டி நகரில் பல இடங்களில் போலீசார் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர்.
நாளை ஹிந்து முன்னணி ஊர்வலம் மாநகரில், 1,100 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மூன்று வேளை பூஜை, அன்னதானம், கலை நிகழ்ச்சிகளுடன் நடந்து வருகிறது. நாளை விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடக்கிறது.
புதிய பஸ் ஸ்டாண்ட், தாராபுரம் ரோடு, செல்லம் நகர் ஆகிய, மூன்று இடங்களில் இருந்து ஊர்வலம் கிளம்பி, முக்கிய ரோடுகள் வழியாக ஊர்வலமாக வலம் வந்து, ஆலாங்காட்டை சென்றடைகிறது. தொடர்ந்து, பொதுக்கூட்டம் நடக்கிறது. சிறப்பு விருந்தினராக பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று பேச உள்ளார். தாராபுரம் ரோடு மற்றும் செல்லம் நகரில் ஊர்வலத்தை நடிகர் ரஞ்சித், டைரக்டர் மோகன்ஜி ஆகி யோர் துவக்கி வைக்க உள்ளனர்.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

