தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ '133 விதை மாதிரிகள் தரமற்றவை'

'133 விதை மாதிரிகள் தரமற்றவை'

'133 விதை மாதிரிகள் தரமற்றவை'


ADDED : ஏப் 25, 2025 07:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2025 07:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம்; -விதை மாதிரிகள் குறித்து வேளாண்துறை மேற்கொண்ட ஆய்வில், 133 விதை மாதிரிகள் தரமற்றவை என்பது தெரியவந்துள்ளது.

பல்லடம் விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் வளர்மதி அறிக்கை: விவசாயிகள் தரமான பயிர்களை பயிர் செய்து, அதிக உற்பத்தியுடன் லாபத்தை ஈட்ட, விதைகளின் பங்கு முக்கியமானது. நல்ல தரமான விதைகளை பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே, விவசாயிகள், விவசாயத்தில் வெற்றி பெற முடியும்.

இவ்வாறு, விவசாயிகள், தரமான விதைகளை பயன்படுத்தி விவசாயிகள் தொழிலை மேம்படுத்த, விதை பரிசோதனை நிலையம் உதவுகிறது.

விவசாயிகள், விற்பனையாளர்கள் மற்றும் விதை உற்பத்தியாளர்களிடம் இருந்து பெரும் விதை மாதிரிகளை பரிசோதனை செய்து, விதைகளின் தரம், முளைப்புத்திறன், புறத்துாய்மை, ஈரப்பதம், பிற ரக கலப்பு ஆகியன குறித்து ஆய்வு செய்து அறியப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய பயிர்களான, நெல், மக்காச்சோளம், பயறு வகைகள், எண்ணெய் வித்துப் பயிர்கள் மற்றும் காய்கறி பயிர்கள் ஆகியவற்றில் விதை மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த, 2024--25ம் ஆண்டு, 7,205 விதை மாதிரிகள் சேகரித்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதில், 133 விதை மாதிரிகள் தர மற்றவை என கண்டறியப்பட்டு, விவசாயிகளுக்கு பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்டன. எனவே, விதைப்புக்கு முன் விதை பரிசோதனை செய்து கொள்வதன் வாயிலாக, விவசாயிகள் நஷ்டத்தை தவிர்த்து அதிக மகசூல் பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us