ADDED : ஜன 20, 2025 11:42 PM
திருப்பூர்; தாராபுரம் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 14 பேர் காயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்துாரை சேர்ந்த, 25 பேர், திருப்பூர் பிச்சம்பாளையத்தில் நடந்த உறவினர் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேனில் நேற்று திருப்பூர் வந்தனர். நிகழ்ச்சி முடித்து விட்டு, தாராபுரம் வழியாக சென்று கொண்டிருந்தனர்.
தாராபுரம், கோனாபுரம் பிரிவு அருகே சென்ற போது, திடீரென வேனின் பின்னால் 'டயர்' வெடித்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில், பியூலா, 20, ஜெயா, 40, கவுசல்யா, 37, கிருபா, 34, ஜெயசீலன், 35, ஜெயா, 40, மேரி, 40, பாலகுமார், 27, கல்யாணி, 35 உட்பட, 13 பேர் காயமடைந்தனர்.
அவர்களை மீட்டு அருகே உள்ள தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிலரை உயர் சிகிச்சைக்காக திருப்பூருக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.