ADDED : ஆக 21, 2025 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி குணசேகரன் வழிகாட்டுதலில், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் விக்னேஷ்மாது முன்னிலையில், சிறைவாசிகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.
திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, பல்லடம், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை கிளைச்சிறைகளில், 6 அமர்வுகளாக நடந்தது. மொத்தம், 23 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டு, 14 சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனர். நீதித்துறை நடுவர்கள் செந்தில்ராஜா, நதியா பாத்திமா, தனலட்சுமி, விஜயலட்சுமி, ஷப்னா, தேன்மொழி, தரணிதர், உமாதேவி ஆகியோர் பங்கேற்று, வழக்குகளை விசாரித்து, தீர்வு கண்டனர்.

