ADDED : நவ 27, 2026 07:46 PM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டு, அக். வரை மாதம் வரையிலான காலத்தில், சராசரியைவிட, 143.89 மி.மீ. மழை குறைவாக பெய்துள்ளது.
திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (நவ.,27) நடைபெற்றது. இதில், கலெக்டர் முத்துக்குமரன் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 660.64 மி.மீ., நடப்பு 2026 ம் ஆண்டு, அக். மாதம் முடிய சராசரியாக 534.07 மி.மீ., மழை பெய்யவேண்டும். ஆனால், சராசரியைவிட 143.89 மி.மீ., குறைவாகவே மழை பெய்துள்ளது.
மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது. நெல் --– 7.41 டன், தானிய பயிறு – 44.08 டன், பயிறு வகைகள் – 18.60, எண்ணெய் வித்துக்கள் – 3.50 டன், யூரியா – 2,831 டன், டி.ஏ.பி., – 1,877, காம்ப்ளக்ஸ் – 5,166, சூப்பர் பாஸ்பேட் – 664 டன் இருப்பில் உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
