/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கற்பக விநாயகர் கோவிலில் 14ல் விமான பாலாலயம்
/
கற்பக விநாயகர் கோவிலில் 14ல் விமான பாலாலயம்
ADDED : செப் 10, 2025 09:54 PM
உடுமலை; உடுமலை ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில், விமான பாலாலயம் வரும் 14ம் தேதி நடக்கிறது.
உடுமலை ஐஸ்வர்யா நகரில் ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ கஜவல்லி, ஸ்ரீ வனவல்லி சமேத ஸ்ரீ கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. கோவிலுக்கு திருப்பணி செய்து கும்பாபிேஷகம் நடத்த உள்ளனர்.
இதற்காக இக்கோவிலில் திருப்பணி துவக்க விழா வரும் 13ம் தேதி மாலை, 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. தொடர்ந்து பஞ்சகவ்யம், பூர்வாங்க பூஜைகள், முதற்கால யாக பூஜை, வேத சிவாகம திருமுறை பாராயணம், உபசாரம், தீபாராதனை நடக்கிறது.
வரும் 14ம் தேதி காலை, 4:00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜையும், பூர்வாங்க பூஜையும் நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு விமானங்கள், பரிவாரங்கள், நவக்ரகம் முதலிய மூர்த்திகள் பாலாலய பிரதிஷ்டை, திருப்பணி துவக்கம் பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.