ADDED : பிப் 16, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி நகர பா.ஜ., தலைவர் தினேஷ்குமார் தலைமையில், சட்டசபை தொகுதி பொறுப்பாளர் நாராயணன், பொதுச் செயலாளர்கள் மோகன்குமார், பிரபு, வெங்கடேசன், ஓ.பி.சி., அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதி சண்முகம் உட்பட பலர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் அளித்த மனு:
நடுவச்சேரி செல்லும் ரோட்டில் ராயம்பாளையம் பிரிவு அருகே தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதில், கடந்த ஆறு மாதத்தில் மட்டும், 15க்கும் மேற்பட்ட சிறுசிறு விபத்துகள் நடைபெற்று பலர் காயமடைந்துள்ளனர்.
இப்பகுதியில் நடுவச்சேரியில் இருந்து அவிநாசி நோக்கி வரும் வாகனங்கள், அதிக வேகமாகவும் கவனக்குறைவாகவும் இயக்கப்படுவதால், தொடர் விபத்து ஏற்படுகிறது. இதனால், அப்பகுதியில், வேகத்தடை அமைக்க வேண்டும்.