/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
15 வயது சிறுமி கர்ப்பம்; மினி பஸ் டிரைவர் கைது
/
15 வயது சிறுமி கர்ப்பம்; மினி பஸ் டிரைவர் கைது
ADDED : மே 22, 2025 03:39 AM
திருப்பூர்; திருப்பூரில், 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய மினி பஸ் டிரைவரை 'போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில், 15 வயது சிறுமி தனியாக நின்று கொண்டிருந்தார். தகவலறிந்து சென்ற திருப்பூர் தெற்கு போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து, குழந்தைகள் நலக்குழு மூலமாக விசாரித்தனர்.
அதில், சிறுமிக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது தெரிந்தது. அவரை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனையில், சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. விசாரணையில், இரண்டு மாதத்துக்கு, தாயாரிடம் கோபித்து கொண்டு சிறுமி வீட்டை விட்டு வெளியேறி, திருப்பூரை சேர்ந்த மினி பஸ் டிரைவரிடம் பழக்கம் ஏற்பட்டது. வாலிபர் ஆசை வார்த்தை கூறி, சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தது.
இதன் காரணமாக, கர்ப்பமானது தெரிந்தது. புகாரின் பேரில், கொங்கு நகர் அனைத்து மகளிர் போலீசார், மினி பஸ் டிரைவர் முகமது நசீர், 23,என்பவரை 'போக்சோ'வில் கைது செய்தனர்.