தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/1,516 மாணவியர் பட்டம் பெற்றனர்

1,516 மாணவியர் பட்டம் பெற்றனர்

1,516 மாணவியர் பட்டம் பெற்றனர்


ADDED : நவ 29, 2026 08:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2026 08:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் குமரன் கல்லுாரியில் 26 மற்றும் 27வது பட்டமளிப்பு விழாக்கள் இன்று (நவ.,29) நடந்தன. கலெக்டர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் ராம்குமார், பாலமுருகன் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் ராஜ்குமார், 1,516 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். தங்கப்பதக்கம் வென்ற 12 மாணவியர், இரண்டாம் இடம் பெற்ற 13 மாணவியர், மூன்றாம் இடம் பெற்ற 9 மாணவியர் கவுரவிக்கப்பட்டனர்.

கல்லுாரி முதல்வர் வசந்தி, துணை மேயர் பாலசுப்பிரமணியம், கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

திருப்பூர் குமரன் கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், அமைச்சர் ராஜ்குமார், மாணவியருக்கு பட்டம் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us