/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
16 அம்ச பொது கோரிக்கை! 120 சதவீத சம்பள உயர்வு கேட்க திட்டம்; 9 தொழில் சங்கத்தினர் கூட்டாக தயாரிப்பு
/
16 அம்ச பொது கோரிக்கை! 120 சதவீத சம்பள உயர்வு கேட்க திட்டம்; 9 தொழில் சங்கத்தினர் கூட்டாக தயாரிப்பு
16 அம்ச பொது கோரிக்கை! 120 சதவீத சம்பள உயர்வு கேட்க திட்டம்; 9 தொழில் சங்கத்தினர் கூட்டாக தயாரிப்பு
16 அம்ச பொது கோரிக்கை! 120 சதவீத சம்பள உயர்வு கேட்க திட்டம்; 9 தொழில் சங்கத்தினர் கூட்டாக தயாரிப்பு
UPDATED : நவ 25, 2025 08:42 AM
ADDED : நவ 25, 2025 05:32 AM

திருப்பூர்: பனியன் உற்பத்தியாளர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, ஒன்பது தொழிலாளர் சங்கங்கள் இணைந்து, 16 ஷரத்துக்களுடன், பொது கோரிக்கை பட்டியல் தயாரித்துள்ளன.
திருப்பூரில், பனியன் உற்பத்தியாளர் சங்கங்களும், தொழிலாளர் சங்கங்களும் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர் சம்பளத்தை உயர்த்தி, ஒப்பந்தம் மேற்கொள்கின்றன. கடந்த 2021ல் போடப்பட்ட ஒப்பந்தம், நடப்பாண்டு செப்., மாதத்துடன் முடிவடைந்தது.
இதையடுத்து, புதிய ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தையை இருதரப்பு சங்கத்தினரும் துவக்கியுள்ளனர். ஆறு உற்பத்தியாளர் சங்கங்களும், ஒன்பது தொழிலாளர் சங்கங்களும் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. முதல் சுற்று பேச்சுவார்த்தை, கடந்த 20ம் தேதி நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில், தொழிலாளர் சங்கங்கள் ஒருங்கிணைந்த பொதுவான சம்பள ஒப்பந்த கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என, உற்பத்தியாளர் சங்கங்கள் வலியுறுத்தின.
இந்நிலையில், பொதுவான சம்பள உயர்வு ஒப்பந்த கோரிக்கை பட்டியல் தயாரிப்பதற்கான பனியன் தொழிற் சங்கங்களின் கூட்டம், திருப்பூர் - அவிநாசி ரோட்டிலுள்ள சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
சி.ஐ.டி.யு., பனியன் சங்க பொதுச்செயலாளர் சம்பத் தலைமைவகித்தார்.
ஏ.ஐ.டி.யு.சி. - சி.ஐ.டி.யு. - எல்.பி.எப். - எம்.எல்.எப்.,- எச்.எம்.எஸ். - ஐ.என்.டி.யு.சி. - ஏ.டி.பி. - பி.எம்.எஸ்., - டி.டி.எம்.எஸ்., ஆகிய ஒன்பது பனியன் தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று பேசி, சம்பள உயர்வு ஒப்பந்த பொது கோரிக்கையை முடிவு செய்தனர். வரும் டிச. 5ம் தேதி, ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் நடைபெறும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில், தொழிலாளர் சங்கங்கள், இந்த 16 அம்ச பொது கோரிக்கைகளை முன்வைக்க உள்ளன .
தொழில் சங்கத்தினர் எதிர்பார்ப்பது என்ன?
தற்போதைய சம்பளத்திலிருந்து 120 சதவீதம் சம்பள உயர்வு.
15 ஆயிரம் ரூபாய்க்கு, மாதம் 5 ஆயிரம் ரூபாய். (உயரும் புள்ளிகளுக்கு ஏற்ப தலா 30 பைசா பஞ்சப்படி)
பயணப்படியாக 50 ரூபாய்.
வீட்டு வாடகைப்படி, 3 ஆயிரம் ரூபாய்.
ஓவர் டைமுக்கு 100 சதவீத பேட்டா.
2 இரண்டு குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை.
10 ஆயிரம் ரூபாய் திருமண உதவித்தொகை.
குரூப் இன்சூரன்ஸில் சேர்க்க வேண்டும்.
பணி காலத்தில் இறந்தால், ஒரு லட்சம் ரூபாய் குடும்ப நல உதவி.
சுற்றுலா செல்ல ஆண்டுக்கு, 5 ஆயிரம் ரூபாய்.
250 தொழிலாளருக்கு ஒரு கூட்டுறவு கடன் சங்கம்.
ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை.
செக்கிங் தொழிலாளருக்கு இருக்கை வசதி.
ஆறு மாதம் பிரசவ கால விடுப்பு.
தொழிலாளர் வாகனங்களுக்கு, பார்க்கிங் வசதி.
தொழிற்சாலை சட்டங்களை அமல்படுத்த வேண்டும்.

