UPDATED : ஆக 22, 2026 09:15 PM
ADDED : ஆக 22, 2026 08:02 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்: தாராபுரம் அருகே 1,720 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபரை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ரகசிய தகவலின் பேரில் தாராபுரம் உடுமலை ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மொபட்டில் அரிசி மூட்டைகளுடன் வந்த தாராபுரம் சீதாநகரைச் சேர்ந்த ராஜா, 44, என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அவர் சுற்றுப்பகுதி வீடுகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 1,720 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மொபட் பறிமுதல் செய்யப்பட்டு, ராஜா கைது செய்யப்பட்டார்.
