ADDED : ஏப் 26, 2025 12:19 AM
தாராபுரம்: தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதுாரில், அரிசி கடத்தல் நடப்பதாக, குடிமை பொருடள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையிலான போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த காரை சோதனையிட்ட போது, தமிழக அரசு இலவசமாக வழங்கிய, 1,750 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், சவுண்டம்மன் கோவில் வீதியை சேர்ந்த ராஜேந்திரன், 57 என்பதும், பூளவாடி, வடத்தரை, பெரியகாடு, சகுனிபாளையம் பகுதி மக்களிடம் இருந்து, ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, வடமாநில இளைஞர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
வழக்கு பதிவு செய்த போலீசார், ராஜேந்திரனை கைது செய்து, 1,750 கிலோ அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.