ADDED : செப் 04, 2026 07:33 PM
அ நிறம் | அளவு
தெக்கலுார் பகுதியில் குட்கா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், வடுகபாளையம் தேசிய நெடுஞ்சாலை பாலம் அருகே போலீசார் ரோந்து சென்றனர். டூவீலரில் வந்தவரிடம் சோதனை செய்தபோது, குட்கா பாக்கெட்கள் இருந்தன.
விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த ராகுல் டிராவிட், 27, என்பதும், வாகராயம்பாளையத்தில் வாடகைக்கு தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரிந்தது. அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 176 கிலோ குட்கா மற்றும் டூவீலரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
––
ராகுல் டிராவிட்
