தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 18 மணி நேரம் வேலையா? போக்குவரத்து ஊழியர்கள் புகார்

 18 மணி நேரம் வேலையா? போக்குவரத்து ஊழியர்கள் புகார்

 18 மணி நேரம் வேலையா? போக்குவரத்து ஊழியர்கள் புகார்


ADDED : மே 13, 2026 07:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 07:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்லடம்: பல்லடம் போக்குவரத்து பணிமனையில், அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

தொழிலாளர் சட்டப்படி, 8 மணி நேரம் மட்டுமே பார்க்க வேண்டும். ஆனால், போக்குவரத்து ஊழியர்கள், தொடர்ச்சியாக, 18 மணி நேரம் வேலை பார்ப்பதால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

உதாரணமாக, பல்லடத்தில் பணியாற்றும் ஊழியர்கள், பல கி.மீ., துாரத்தில் வசிக்கின்றனர். செட்டிபாளையம் ரோட்டில் உள்ள போக்குவரத்து பணிமனைக்கு, போதிய பஸ் வசதி கிடையாது.

எந்த நேரமாக இருந்தாலும், சொந்த வாகனத்தில் தான் வந்து செல்ல வேண்டும். காலை, 5.00 முதல் இரவு, 11.00 மணி வரை தொடர்ந்து வேலை பார்க்குமாறு அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.

இதனால், போதிய துாக்கமின்மை, மன உளைச்சல் ஆகியவற்றால், ஊழியர்கள் கடுமையான சோர்வுக்கு ஆளாகின்றனர். சமீபத்தில், அதிகாலையில் வேலைக்கு வந்த ஊழியர் ஒருவர், நாய் குறுக்கே வந்ததால் விபத்து ஏற்பட்டு, படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ளார்.

கூடுதல் வேலைப்பழு காரணமாக, ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். போக்குவரத்து ஊழியர்களை கசக்கி பிழியும் இச்செயலை, வன்மையாக கண்டிக்கிறோம். எனவே, 8 மணி நேர வேலை என்ற விதிமுறையை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us