ADDED : பிப் 10, 2025 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : காங்கயம் சென்னிமலை ரோட்டை சேர்ந்தவர் மீனாட்சி, 65. காங்கயம் - கோவை ரோட்டில் நடந்து சென்றார். வட்டமுக்கு என்ற இடத்தில், ரோட்டை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த கார் மோதியதில் மீனாட்சி இறந்தார்.
படியூரை சேர்ந்தவர் வீரன், 57. நேற்று மதியம் காங்கயம் - திருப்பூர் ரோட்டில் சரக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். பெருமாள் மலை அருகே, அவ்வழியாக வந்த கார், சரக்கு ஆட்டோ மீது மோதியதில் வீரன் பலியானார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.