/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோழி தீவனம் திருடிய 2 பேர் கைது
/
கோழி தீவனம் திருடிய 2 பேர் கைது
ADDED : ஏப் 19, 2025 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: பல்லடம்-, உடுமலை ரோட்டில், தென்னை நாற்று உற்பத்தி செய்யும் பண்ணை ஒன்று உள்ளது.
இங்கு, ஆனைமலை - கம்மாளபட்டியை சேர்ந்த முருகேசன் மகன் பரமசிவம், 29 என்பவர் சூப்பர்வைசராக வேலை பார்த்தார். அதே பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன், 35; ஆட்டோ ஓட்டுனர்.
இருவரும் இணைந்து, பண்ணை பயன்பாட்டுக்காக வந்த கோழி தீவனத்தில், ஒரு டன் தீவனத்தை, ஆட்டோவில் திருடி சென்றனர். பண்ணை மேலாளர் சந்திரசேகர், 48 அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட பல்லடம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

