ADDED : ஜன 24, 2025 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் பழனியம்மாள் பள்ளி எதிரே இரண்டு பேர் சந்தேகத்துக்கு இடமான வகையில் அமர்ந்திருந்தனர்.
அவர்களிடம் திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தியபோது, இருவரிடமும் போதை ஊசி மற்றும் வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது கண்டறியப்பட்டது.
விசாரணையில், பெரிய தோட்டத்தை சேர்ந்த முகமதுபைசல், 25; முதலிபாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சதாம் உசேன், 35 என்பதும், பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்துகொண்டே, ஆன்லைனில் வலி நிவாரண மாத்திரை வாங்கி, போதை ஊசி தயாரித்து, உடலில் செலுத்தி பயன்படுத்தியது தெரிந்தது.
மற்றவர்களுக்கும் போதை ஊசிகளை விற்றும் வந்துள்ளனர். இருவரையும் கைது செய்த போலீசார், 30 மாத்திரை மற்றும் போதை ஊசிகளை பறிமுதல் செய்தனர்.