/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் பாலக்காடு வரை மட்டுமே!
/
2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் பாலக்காடு வரை மட்டுமே!
ADDED : ஜன 11, 2025 09:11 AM
திருப்பூர் : திருவனந்தபுரம் கோட்டத்தில் ஜனவரி நான்காவது வாரம் நடக்கும் மேம்பாட்டு பணி காரணமாக காரைக்கால் டீ கார்டன், ஆலப்புழா எக்ஸ்பிரஸ் பாலக்காடு வரை மட்டும் இயங்கும். இரண்டு நாள் மட்டும் எர்ணாகுளம், ஆலப்புழா செல்லாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட பல்வேறு பகுதியில் பொறியியல் மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால், தமிழகத்தில் இருந்து கேரள மாநிலம் வழியாக பயணிக்கும் ரயில்களின் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, 'சென்னையில் இருந்து ஆலப்புழாவுக்கு இயக்கப்படும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் (எண்:22639) மற்றும், நாகை மாவட்டம், காரைக்காலில் இருந்து எர்ணாகுளத்துக்கு இயக்கப்படும் டீ கார்டன் எக்ஸ்பிரஸ் (எண்:16187) இரண்டு ரயில்களும் வரும், 18 மற்றும், 25ம் தேதி பாலக்காடு வரை மட்டும் இயக்கப்படும்.
ஒத்தப்பாலம், வடக்கஞ்சேரி, திரிசூர், ஆலுவா, எர்ணாகுளம் செல்லாது. மறுமார்க்கமாக, வரும், 19 மற்றும், 26ம் தேதி ஆலப்புழா, எர்ணாகுளத்தில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக, பாலக்காட்டில் இருந்து சென்னை மற்றும் நாகப்பட்டினத்துக்கு ரயில் இயங்கும் என, ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

